Monday, 17 September 2018

அன்பு நண்பர்களே , சகோதரர்களே  இன்று முதல் நமது குமரி அஞ்சல் தளம் புதிய பாதையில் நடைபோட துவங்குகிறது,

கவிதைகள்
கதைகள்
இலக்கியம்
மற்றும்
செய்திகள் என பல புதிய வடிவங்களில்
உங்களை மகிழ்விக்க வருகிறது.

நன்றி .

Saturday, 3 March 2018

ஐரோப்பாவை உறைய வைக்கும் பனிப்புயல்

 ரோம்: ஐரோப்பாவில் வீசும் கடுமையான பனிப்புயலால் ஸ்காட்லந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நகரங்களை வெண்பனி போர்த்தியுள்ளது. சாலைகள், விமான நிலையங்களிலும் பனி உறைந்து கிடப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக ஐரோப்பிய கண்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. சராசரியாக மைனஸ் 10 டிகிரி அளவிலேயே வெப்பநிலை நீடிப்பதால் கடுமையான பனிப்புயலையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். நெடுஞ்சாலைகளைப் பனி போர்த்தியுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. விமான நிலையங்களிலும் இதே நிலை தான் தெளிவான வானிலை இல்லாததன் காரணமாகவும் டப்லின் விமான நிலையத்தை வெண்பனி போர்த்தி இருந்ததாலும் விமான சேவைகள் நாளை வரை நிறுத்தப்பட்டுள்ளன. 
 
ஐரிஸ் ரயில் சேவைகளும் நாளை வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத நிலை இருக்கிறது. அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, வணிக வளாகங்களும் அதிக அளவில் மூடியே கிடக்கின்றனர். 
பனிப்புயல் காரணமாக வீடற்றோரின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. 
உலக சுகாதார மையம் எச்சரிக்கை  
 வயதானோர், குழந்தைகள் மற்றும் எளிதில் நோய் தொற்றும் அபாயம் இருப்பவர்களுக்கு இந்த பனிப்புயலால் அதிக ஆபத்துகள் இருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. பிரெஞ்ச், பாரிஸ் அரசுகள் வீடற்ற 3 ஆயிரம் பேருக்கு மாற்று தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி வருகின்றன. 
 
போலந்தில் அதிக உயிரிழப்புகள்  
 அதிகப்படியான பனிப்பொழிவால் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக போலந்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்லோவாக்கியாவில் 7 பேர், செக்குடியரசில் 6 பேர், லிதுவேனியாவில் 5 பேர், ஃபிரான்ஸில் 4 பேர், செர்பியா, இத்தாலி, ஸ்லோவேனியா, ரொமானியாவில் தலா 2 பேர், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். 
 
விமான சேவைகள் முடக்கம்  
பனிப்போர்வையால் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா விமான நிலையம், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ மற்றும் எடின்பர்க் விமானநிலையங்களும் ஸ்தம்பித்தன. தெற்கு பிரான்சில் 2 ஆயிரம் கார்கள் ஹெரால்ட் பகுதியில் கடுமையான பனியால் சாலைகளில் உறைந்துகிடக்கின்றன. இதனால் போக்குவரத்தை தவிர்க்குமாறு ஸ்வீடன் சாலை போக்குவரத்துத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 
 
புயலுக்கு விதவித பெயர்கள்  
 இந்த மோசமான பனிப்புயலுக்கு ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு பெயரை வைத்துள்ளன. பிரிட்டன் 'கிழக்கில் இருந்து வந்த பீஸ்ட்' என்றும் டச் சைபீரியன் பியர் என்றும், ஸ்வீடன் ஸ்னோ கேனான் என்று அழைக்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/snow-spells-at-europe-freezes-peoples-life-nearly-55-dead/articlecontent-pf298136-313096.html?utm_source=spikeD&utm_medium=LT&utm_campaign=adgebra

Sunday, 18 February 2018

வானத்தில் ஏவப்பட்ட டெஸ்லா கார் பூமி மீது மோத போகிறது..

வானத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் டெஸ்லா கார் பூமியில் மோத வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்களை மூன்று விஞ்ஞானிகள் சமர்பித்து உள்ளனர். சில நாட்கள் முன்பு உலகின் பெரிய ராக்கெடான ''ஃபல்கான் ஹெவி'' வானத்தில் ஏவப்பட்டு இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இந்த சாதனையை செய்து இருக்கிறார். இதனுடன் சிவப்பு நிற டெஸ்லா கார் ஒன்றும் அனுப்பப்பட்டது. தற்போது இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

Tuesday, 19 March 2013

நாகர்கோவில்
அஞ்சல் துறையில் பணியாற்றுகிறேன்
தமிழ் ஆர்வம் உண்டு

மனமே

நேற்றைய நினைவுகளை
வகைப்படுத்தி பாதுகாத்து

இன்றைய பதிவுகளை
இனமறிந்து  அப்டேட் செய்து

நாளைய கனவுகளுக்காய்
காத்திருக்கும்

மனமே
நீ என்னுள் எங்கிருக்கிறாய்?

என்றோ நான் தொலைத்த
நினைவுகளை
இன்று இங்கே இழுத்துவந்து
இதயத்தை ரணமாக்கும்
மனமே
நீ என்னுள் எங்கிருக்கிறாய் ?

முடிந்ததுவோ முடியலையோ
முற்றும்
மறந்ததுவோ மறக்கலையோ
நெஞ்சம்
நினைக்கிறதோ நினைக்கலியோ
 கொஞ்சம்
புரிகிறதோ புரியலையோ

ஓ ... மனமே
நெஞ்சின் ஆழத்தில்
புதைத்து வைத்த
நினைவுகளை
ஏன் இழுத்துப்பார்க்கிறாய்.


பாட்டியின்  இடுப்பில் பயணித்து
பள்ளிக்கு சென்றநாளில்
கணித ஆசிரியர் இட்ட அடி
என் தொடையில் விழுந்ததோ ?
இல்லையில்லை
என் பாட்டியின்
ஈரக்குலையில் விழுந்ததோ ?
வலியின் சுவடு
மறுநாளே மறைந்துவிட்டது
என் பாட்டியின்
கண்ணீரின் சூடு
இன்றுவரை என் நெஞ்சில் கதகதப்பாய்


 

Friday, 11 January 2013

கவிரித்தாயினை சிறைவைத்தார் கயவர்
கல்லணை காய்கிறதே; ஈரமிலா நெஞ்சத்தார்
மண்ணில் நீர் விரிய மறுப்பதனால் -கண்வழியே
வழிகிறதோ காவிரி நீர்.

Thursday, 15 November 2012

பணியை எந்த அளவுக்கு நேசிக்க வேண்டும் எனத் தெரியாமல் பணிக்கு
அடிமையாகிவிடுபவர்கள் உண்டு. பணியும்  செயல்பாடுமே போதைகளாகிவிடுகின்றன. எந்த போதையும் ஆபத்தானது; அது மதுவாக இருந்தாலும் சரி, பதவியாக இருந்தாலும் சரி. ஏனென்றால்,  அது புலன்களை மந்தமாக்கிவிடும் சக்தி வாய்ந்தது.

நாற்காலியே முக்கியம் என்றும், மேலதிகாரியின் பாராட்டுப் பத்திரமே பதக்கமென்றும், பரிசு பெறும் புகைப்படங்களே ஆதர்சம் என்றும் வாழும்
பலர் ஒய்வு பெறும்போது தங்களுக்குத்  தாங்களே பச்சாதாபப்பட்டுக் கொள்வதைப் பார்க்க முடியும். ' இதற்காகவா வாழ்க்கையின் எத்தனையோ இனிய நிகழ்வுகளை நாம் இழந்தோம்' என அவர்கள் அங்கலாய்த்துக் கொள்வதைக்  காணலாம். சாதனைகள் செய்யும் நோக்கில் அப்பாவின் பிறந்த நாளை, பெற்றோர்களின் திருமண நாளை, குழந்தைகளின் தேர்வுத்  தேதியை
மறந்த இவர்கள், தங்கள் இல்லத்திலேயே கருணை இல்ல உறுப்பினராக காலம் தள்ளுபவர்கள்.

வெ. இறையன்பு அவர்களின் "எப்போதும் இன்புற்றிருக்க ..." நூலிலிருந்து ....

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.