இனிப்பு
என்றால் இனிப்பது
இளஞ்சிறார்க்கு
மட்டுமல்ல. அதைக்
கண்டால், ஐம்பதிலும்
ஆசை வரும்.
சர்க்கரை
நோய் வந்தவர்களுக்கோ,
திருமண வீட்டில்
பாயாசத்தைப் பார்த்தவுடன்,
அருந்தாமல் பந்தியிலிருந்து எழும்பவும்
மனம் வராது.
எத்தனை நாள்தான்
இன்சுலினை ஏற்றுவது?
பாயாசம் அருந்திவிட்டு, பலவித
மருந்துகளை உள்ளே
தள்ளுவது? மூச்சிரைக்க
மூன்று மைல்
துhரம்
நடந்தாலும் ரத்தத்தில்
சர்ககரையின்
அளவு குறையாது.
இதோ
உங்களுக்கான இனிப்பான
செய்தியிது. கரும்பிலும்
இனிப்பானது, இனிப்பு
நோயாளிகளை இம்சிக்காது.
இந்தியாவில் விரைவில்
அறிமுகமாகவுள்ள “ஸ்டீவியா”
என்றோர் மூலிகைச்செடி. பராகுவேயில்
பயிரிடப்படும்
இந்த மூலிகைச்செடியின் இலைகளைப்
பறித்து காயவைத்து,
இடித்து பொடியாக்கி
இன்சுவைக்காய் அந்நாட்டு
மக்கள் இன்றளவும்
பயன்படுத்துகின்றனர். சர்க்கரையைவிட 200 மடங்கு
இனிப்பானது.
நறுமணம்
மிக்க இச்செடியை
நம் வீட்டுத்
தோட்டத்திலும் பயிரிடலாம். 10
முதல் 32 டிகிரி
வெப்ப நிலையில்
பக்குவமாய் வளரும்.
பராமரிப்பது
மிக மிக
எளிது. இதன்
இலை மட்டுமல்ல,
தண்டும் விதையும்
இனிப்பிற்காக ஏங்கும்
வாய்க்கு இனிக்கும்
சர்க்கரையாகும்.
இதை உண்பதால்
கலோரிகளில்லை.
இன்னும் ஒருபடி
மேலாய், இன்சுலின்
சுரக்க உதவும்.
பக்க விளைவு
பாதிப்புகளும் இல்லையென்பதால், நிச்சயம்
ஒருநாள் “ஸ்டீவியா”
நிலை கொள்ளும்
Read more: http://www.unavuulagam.in/2010/07/blog-post_26.html#ixzz21iNzr5wV

No comments:
Post a Comment