வானத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் டெஸ்லா கார் பூமியில் மோத
வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டு
இருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்களை மூன்று விஞ்ஞானிகள் சமர்பித்து உள்ளனர்.
சில நாட்கள் முன்பு உலகின் பெரிய ராக்கெடான ''ஃபல்கான் ஹெவி'' வானத்தில்
ஏவப்பட்டு இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க்
இந்த சாதனையை செய்து இருக்கிறார்.
இதனுடன் சிவப்பு நிற டெஸ்லா கார் ஒன்றும் அனுப்பப்பட்டது. தற்போது இந்த
கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.