Tuesday, 19 March 2013

நாகர்கோவில்
அஞ்சல் துறையில் பணியாற்றுகிறேன்
தமிழ் ஆர்வம் உண்டு

மனமே

நேற்றைய நினைவுகளை
வகைப்படுத்தி பாதுகாத்து

இன்றைய பதிவுகளை
இனமறிந்து  அப்டேட் செய்து

நாளைய கனவுகளுக்காய்
காத்திருக்கும்

மனமே
நீ என்னுள் எங்கிருக்கிறாய்?

என்றோ நான் தொலைத்த
நினைவுகளை
இன்று இங்கே இழுத்துவந்து
இதயத்தை ரணமாக்கும்
மனமே
நீ என்னுள் எங்கிருக்கிறாய் ?

முடிந்ததுவோ முடியலையோ
முற்றும்
மறந்ததுவோ மறக்கலையோ
நெஞ்சம்
நினைக்கிறதோ நினைக்கலியோ
 கொஞ்சம்
புரிகிறதோ புரியலையோ

ஓ ... மனமே
நெஞ்சின் ஆழத்தில்
புதைத்து வைத்த
நினைவுகளை
ஏன் இழுத்துப்பார்க்கிறாய்.


பாட்டியின்  இடுப்பில் பயணித்து
பள்ளிக்கு சென்றநாளில்
கணித ஆசிரியர் இட்ட அடி
என் தொடையில் விழுந்ததோ ?
இல்லையில்லை
என் பாட்டியின்
ஈரக்குலையில் விழுந்ததோ ?
வலியின் சுவடு
மறுநாளே மறைந்துவிட்டது
என் பாட்டியின்
கண்ணீரின் சூடு
இன்றுவரை என் நெஞ்சில் கதகதப்பாய்


 

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.